ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது கொடுக்கப்படவுள்ளது.
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது, 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற 30வது சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து வழங்கப்பட்டுவருகிறது.
தற்போது 79 வயதாகும் மைக்கேல் டக்ளஸ், இதுவரை இரண்டு அகடமி விருதுகள், 5 கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் ஒரு எம்மி விருதையும் வென்றுள்ளார்.
“வால் ஸ்ட்ரீட்(1987)”, “பேசிக் இன்ஸ்டன்ட்(1992)”, “ஃபாலிங் டவுன்(1993)”, “தி அமெரிக்கன் பிரசிடெண்ட்(1995)” உள்ளிட்ட திரைப்படங்களில் தன் நடிப்புக்காக நன்கு அறியப்பட்டவர்.