ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த 15 எம்பிக்கள் – 13 அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை வலையில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல்வாதிகள் யாரும் தப்பிக்கவே முடியாது எனப் பாரத பிரதமர் மோடி சொன்னாலும் சொன்னார். ஊழல்வாதிகளைக் களையெடுக்க அமலாக்கத்துறை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 -ம் தேதி சோதனையைத் தொடங்கியது. ஆனால், 10-ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நடைபெற்றது. இதில், பல கோடி ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் எல்லாம் சிக்கியது. இந்நிலையில், ஜெகத் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது வருமானவரித்துறை.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் வைத்துள்ளது. செம்மண் குவாரி விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். அவரது மகன் கௌதம சிகாமணியும் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஊழல், சட்ட விரோத பணப்பரிமாற்ற விவகாரங்களில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த 15 எம்பிக்கள் மற்றும் 13 அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை வலையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சனாதனத்தை அழிப்போம் என பேசும் திமுகவினர் தங்களையும், தங்களது பினாமிகளையும் காப்பாற்றக்கோரி கோவில்கோவிலாக அலைந்து திரிந்து வருகின்றனர்.