2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் நடந்த அதே சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
2011 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மொஹாலி மைதானத்தில் விளையாடியது. அந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 260 ரன்கள் குவித்து இருந்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியை இந்தியா அணி 231 ரன்களுக்கு ஆல் – அவுட் செய்து போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில், இந்திய அணியில் ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாப் பட்டேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் என ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசி, அனைவருமே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதே போல, 2023 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியப் போட்டியிலும் நடந்ததுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் 5க்கும் மேற்பபட்ட ஓவர்கள் வீசினர். ஷர்துல் தாக்குர் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அந்த அதிக ஓவர்கள் வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா என ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு ஆளுக்கு 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இந்த சம்பவம் மூன்றாவது முறையாக நடக்கிறது.
2011 உலகக்கோப்பை தொடரில் நடந்த அதே சம்பவம் அதே அணியுடன் நடந்துள்ளதால், வரலாறு மாறாமல் இந்த முறையும் இந்தியா கோப்பையை வெல்லுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.