தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியாகியுள்ளது.
சென்னையில் 15-ம் தேதி அதிகாலையில் முதல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அண்ணா நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதேபோல, சென்னை புறநகர்ப் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வரும் 17 -ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதனால், தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மலை மாவட்டங்களான கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.