ஜெய் ஸ்ரீராம் - உதயநிதிக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்!
Sep 8, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய் ஸ்ரீராம் – உதயநிதிக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்!

Web Desk by Web Desk
Oct 15, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ராம ராஜ்ஜியம் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. ரசிகர்களின், மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது தான்.

பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் போது அந்த நாட்டில் உள்ள ரசிகர்கள் நம் நாட்டு விளையாட்டு வீரர்களை எப்படியெல்லாம் இழிவாக தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்கள் என்பது உதயநிதிக்கு தெரியுமா? பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள் உதயநிதிக்கு தெரியுமா? மற்றொரு நாட்டில், உன் அப்பா பெயர் என்ன? என்று நம் நாட்டு வீரர்களை என்று ரசிகர்கள் கேட்டபோது உதயநிதி எங்கிருந்தார்?

நாசகார செயல்களில் ஈடுபடும் ஹமாஸ், ஐ எஸ் உள்ளிட்ட நம் நாட்டில் உள்ள இதர பயங்கரவாத இயக்கத்தினர் கூட அழிவுகளை ஏற்படுத்தும் போது ,’அல்லாஹு-அக்பர்’ என்று சொல்வதை, அதாவது இறைவனே மிகப் பெரியவன் என்று சொல்வதை உதயநிதி கேள்விப்பட்டிருக்கிறாரா? அது தவறில்லையா? ஒரு மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா?

ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? அந்த ரசிகர்கள் மற்றொரு மதத்தை புண்படுத்தி பேசியிருந்தால் கண்டிப்பதில் நியாயம் உள்ளது.

கோவையில் 1998 -ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை ‘முஸ்லிம்’ கைதிகள் என்று மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்கு தங்களின் கடவுளை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை. விளையாட்டு அமைச்சர் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நம்பிக்கைகளில் விளையாட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: udhyanithiDMK Ministernarayanan tiruppathi
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி “காலி”!

Next Post

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் – தொடர்ந்து 4- வது நாளாகக் குளிக்கத் தடை!

Related News

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies