சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் தற்காலிமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், அதாவது, 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னை சென்னை எழும்பூர் – குருவாயூர் (வண்டி எண் 16127) விரைவு ரயில், இன்று முதல், அதாவது 15 -ஆம் தேதி முதல் 20 -ம் தேதி வரை சென்னையிலிருந்து எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல, வரும் 22 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரையும், இனைத் தொடர்ந்து 29 -ம் தேதி மற்றும் 30 -ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், பயணிகள் ரயில்வே சேவைக்கு ஏற்ப தங்களது பயணத்திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும் எனத் தென்னக ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.