பிசிசிஐ கே.எல். ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதாலும், இந்திய வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்ததாலும் இந்தியாவிற்கு இந்த எளிய இலக்கு நிர்ணயிக்க பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
பந்துவீச்சில் 5 பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர், இருப்பினும் ஜஸ்பீர்த் பும்ரா 19 ரன்களை மட்டுமே குடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இதுவரை ஆட்டநாயகன் விருது சிறந்த பேட்ஸ்மன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது ஆனால் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை. இந்த கவலையை போக்கும் விதமாக பிசிசிஐ சிறந்த பீல்டருக்கு தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது.
கடந்த போட்டியில் சிறந்த பீல்டர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் சிறந்த பீல்டர்கான விருது விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் சிறப்பாக செய்த கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அவர் பீல்டிங் செய்த வீடியோவை பிசிசிஐ ஒளிபரப்பியது, இந்த காணொலியை இந்திய வீரர்கள், ரசிகர்களை போலவே கத்தி கூச்சலிட்டு கண்டனர்.