உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 285 ரன்கள் இலக்கு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் இவர்களின் பாட்னெர்ஷிப் 100 ரன்களை கடந்தது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இவர்களின் பாட்னெர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இருந்த போது 16 வது ஓவருக்கு அடில் ரஷித் பந்துவீசினார்.
16 வது ஓவரின் 4 வது பந்தை இப்ராஹிம் சத்ரான் ஓங்கி அடிக்க அந்த பந்து ரூட் கைக்கு சென்றது. இதனால் இப்ராஹிம் சத்ரான் 48 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக விளையாடி வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் எடுத்த நிலையில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இக்ராம் அலிகில் 66 பந்துகளுக்கு 58 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 16 பந்துகளுக்கு 28 ரன்களும், ரஷித் கான் 22 பந்துகளுக்கு 23 ரன்களையம் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரஷித் 3 விக்கெட்களும், மார்க் வுட் 2 விக்கெட்களும் மற்ற வீரர்கள் 1 விக்கட்டையும் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற 285 ரன்கள் இலக்காக உள்ளது.