தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 42.44 அடியாக உள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரத்து 433 கன அடியிலிருந்து இன்று காலை 8 ஆயிரத்து 893 கன அடியாக குறைந்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 13.38 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.