இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் தொடர்பான விவரங்களை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியை பார்த்து கொண்டிருந்த போது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவு வகைகள் தொடர்பான விவரங்களை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அந்நிறுவம் விடுத்துள்ள பதிவில், ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சண்டிகர் நகரில் ஒரு வீட்டின் உரிமையாளர் ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ததாகவும், இதன் மூலம் அவர் வெற்றியை கொண்டாடியது தெரியவந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
10,916 யூனிட் ப்ளூ லேஸ் (சிப்ஸ்) மற்றும் 8,504 கிரீன் லேஸ் சிப்ஸ் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இங்கேயும் நீலம் நிறம் வெற்றி பெறுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.