ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 13 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 14 வது போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்யை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர். இவர்கள் இருவரும் 20 வது ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடக்க வீரர்கள் இருவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில், நிசாங்கா 61 ரன்கள் சேர்த்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் 13 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் மைதானத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடை பட்டது.
மழை நின்ற பிறகு இலங்கை அணியின் பக்கம் காற்று வீசும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்து அடுத்தது சொற்ப ரன்களில் இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இதனால் 44 வது ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழத்து 209 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆடம் சம்ப 4 விக்கெட்களை வீழ்த்தினார். பட் கும்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களும் கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
இதில் டேவிட் வார்னர் 3 வது ஓவரில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித் டௌக் அவுட் ஆகி சென்றார். அடுத்ததாக களமிறங்கிய மார்ன்ஸ் மற்றும் மிட்செல் ஜோடி சிறப்பாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
இதில் மிட்செல் மார்ஷ் 51 பந்துகளுக்கு 52 ரன்களும், மார்ன்ஸ் 60 பந்துகளுக்கு 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 59 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 31 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 20 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதுநாள் ஆஸ்திரேலியா அணி 36 வது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்களை வீழ்த்திய ஆடம் சம்பாவிற்கு வழங்கப்பட்டது.