ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதற்கு முக்கியகாரணமாக திகழ்கிறார் விராட் கோலி.
கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கமிட்டி இதற்கு இத்தனை விரைவாக ஒப்புக் கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக நடந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. அதில் கிரிக்கெட் விளையாட்டு எத்தனை பிரபலம் என்பதை காட்ட விராட் கோலி சமூக ஊடகத்தில் எவ்வளவு பெரிய சக்தி என கூறி இருக்கிறது ஐசிசி.
கிரிக்கெட் விளையாட்டுக்கு எவ்வளவு இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்வதை விட ஒரே ஒரு கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு எத்தனை ரசிகர்கள் என பாருங்கள் என கூறி இருக்கிறது ஐசிசி. கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே 24 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
மற்ற சமூக ஊடகங்களையும் சேர்த்து விராட் கோலிக்கு மொத்தமாக 34 கோடி இரசிகர்கள் இருக்கிறார்கள். அதை உறுதி செய்த ஒலிம்பிக் கமிட்டி அந்த ஒரு விஷயத்திலேயே அசந்து போய் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் ஒலிம்பிக் பல படிகள் பிரபலம் ஆகும், அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து ஒப்புதல் அளித்து இருக்கிறது.