உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் தேம்பா பாவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன் படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
நெதர்லாந்து அணியின் வீர்ரகள் :
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் :
குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.