உலகக்கோப்பை இன்றைய போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் நேத்ராலன்ட் வீரர்கள் மோசமாக பேட்டிங் செய்து வருகின்றனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி தர்மசாலாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் போடப்பட்ட பிறகு மைதானத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது.
2 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை நின்ற பிறகு 4 மணியளவில் தொடங்கியது. இதனால் இந்தப் போட்டி 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி 43 ஓவர்களாக தொடங்கிய இப்போட்டியில் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. நெதர்லாந்து அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். இதுவரை எந்த வீரரும் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை.
நெதர்லாந்து அணி ஏற்கனவே இரண்டுப் போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளதை அடுத்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.