ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய போட்டியில் போராடி தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிறது. அதில் நேற்றையப் போட்டி தர்மசாலாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் போடப்பட்ட பிறகு மைதானத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது.
2 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை நின்ற பிறகு 4 மணியளவில் தொடங்கியது. இதனால் இந்தப் போட்டி 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர். இதில் விக்ரம்ஜித் சிங் 16 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க அடுத்ததாக மேக்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறக்கிய கொலின் அக்கர்மேன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க பாஸ் டி லீடே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் சிறப்பாக விளையாடி அணியை முன்னிலை படுத்தினர். ஸ்காட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளுக்கு 78 ரன்களை எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக லுங்கி, மார்கோ, ரபாடா தலா 2 விக்கெட்களும் ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் 43 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்தது.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் தேம்பா பாவுமா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். தேம்பா பாவுமா 16 ரன்களும் குயின்டன் டி காக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19 வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 85 /5 ஆகா இருந்தது.
டேவிட் மில்லர் சிறிது போராடி 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக லோகன் வான் பீக் 3 விக்கெட்களும், ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகெரென், பாஸ் டி லீடே ஆகியோர் தல 2 விக்கெட்களும் வீழ்த்தினர். கொலின் அக்கர்மேன் 1 விக்கெட் எடுத்தார்.
இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 78 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்க்கு வழங்கப்பட்டது.