இரு சக்கர வாகனங்களில் பெண்கள் கையில் வாள்களுடன் ‘கர்பா’ நிகழ்ச்சியை கொண்டாடினர்.
குஜராஜ் மாநிலம் ராஜ்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் மூன்றாம் நாளான நேற்று ராஜ்வி அரண்மனையில் நவராத்திரி விழாவில் கர்பா நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்பா நிகழ்ச்சி என்பது குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்களின் கலாச்சார உடையை அணிந்து திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில், துர்கா தேவியை போற்றும் விதமாக பெண்கள் பாரம்பரிய உடையை அணிந்து இரு சக்கர வாகனங்களில் கைகளில் வாள்களை ஏந்தியவாறு நிகழ்ச்சியைக் கொண்டாடினர்.
வாள்களை சுழன்றி கொண்டு புல்லட்டை ஓட்டும் போது நம் பாரத பெண்கள், வீர மங்கையாக காட்சிதந்தனர். இருசக்கர வாகனம் மட்டுமின்றி நான்கு சக்கர வாகனத்திலும், ஒரு கையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மற்றொருக் கையில் வாள்களை சுழற்றிக் கொண்டு சென்றனர்.
மேலும் ஒரே வண்டியில் ஒரு பெண் வண்டியை ஓட்டவதும் மற்றொரு பெண் பின்னே நின்றுக்கொண்டு வாள்களை சுழற்றுவதுமாய் இந்நிகழ்ச்சியை கொண்டாடினர். இதனை கண்டோர் பிரமித்து நின்றனர்.