ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகின்றது.
மேலும் இந்தப் போட்டியில் 13 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதுவரை நியூசிலாந்து அணி நிதானமாக பேட்டிங் செய்துவருகிறது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் :
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, இக்ராம் அலிகில், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.