உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம்! - பிரகலாத் சிங் பட்டேல்.   
Oct 18, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம்! – பிரகலாத் சிங் பட்டேல்.   

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக உணவு இந்தியா 2023-ன்  இரண்டாவது பதிப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்,

உலக உணவு இந்தியா என்பது உலகளாவிய இத்துறைச் சார்ந்தோர் முன் உணவுத் துறையின் திறனை காட்டுவதற்கான ஒரு முயற்சியாகும். 11 மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தன்னாட்சி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், இந்த நிகழ்ச்சி முழு அரசு ஒத்துழைப்பு அணுகுமுறைக்கும் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு என்று  சுட்டிக்காட்டினார். உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது

இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும், மற்ற நாட்களில் மேலும் உணவுத்துறைச் சார்ந்தோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கொள்முதல் செய்வோர் சுமார் 1000  பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

உலகளாவிய மிகப்பெரிய உணவு நிகழ்வான உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் 2023 நவம்பர் 3 முதல் 5 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 3 ஆம் தேதி பிரகதி மைதானத்தில் உள்ள புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு நவம்பர் 5-ஆம் தேதி நிறைவுரையாற்றுகிறார்.

உலகின் மிக நீளமான தோசை என்ற கின்னஸ் சாதனையை உருவாக்கும் முயற்சியும் நடைபெற உள்ளது. 60 முதல் 80 சமையல்காரர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத்தில் சிறுதானிய தோசையை உருவாக்க உள்ளனர், இது குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும்.

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ஐ கொண்டாடும் வகையில், 50,000 டெட்ரா பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: central government ministerPraglad Singh Patel.
Share
Tweet
SendShare
Previous Post

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்!

Next Post

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies