ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஜனவரி 2011 முதல் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
மியான்மரில் வங்காள மொழி பேசும் சிறுபான்மை முஸ்லிம்கள் ரோஹிங்கியாக்கள். தங்கள் நாட்டில் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் பலர் வங்காளதேசம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் உட்பட 13,700 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குடியேறியுள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறியும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாதாந்திர அறிக்கையைத் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
குழுவின் தலைவராக நிதி ஆணையர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இருப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.