கோபிசெட்டிபாளையத்தில் என் மண்; என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நெறியாளர் மாதேஷ் சந்தித்தார்.
பா.ஜ.,க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மதியம் பவானி சாகரில் இருந்த பயணத்தை தொடங்கிய அவருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் சென்ற அண்ணாமலைக்கு நகர பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை நெறியாளர் மாதேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.