மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்ததார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது, செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்துள்ளார்.