பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வடக்கு ரயில்வே 34 பூஜா சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வடக்கு ரயில்வே பொது மேலாளர் ஷோபன் சௌத்ரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 18 முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் என்றும், பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக இந்த ரயில்களில் போதுமான எண்ணிக்கையிலான பெட்டிகள் சேர்க்கப்படும் என்றார்.
ரயில்வே டிக்கெட்டுகளை கறுப்புச் சந்தைப்படுத்துவதைத் தவிர்க்க, ரயில்வே அங்கீகாரம் பெற்ற டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் சவுத்ரி கேட்டுக்கொண்டார்.
முன்பதிவு கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கவும், தற்போதுள்ள அனைத்து கவுண்டர்கள் இயக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
தற்போதைய நிலவரப்படி, இந்த சிறப்பு ரயில்கள் போதும் என நினைப்பதாகவும், எனினும் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் தேவை என்றால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.