ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் (EBSB) இன் கீழ் யுவ சங்கத்தின் மூன்றாம் கட்ட பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
யுவ சங்கம் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஓர் அணியில் இணைக்கும் ஒரு முயற்சியாகும். சுற்றுலா, மரபு, மேம்பாடு, மக்கள் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஐந்து பரந்த பகுதிகளின் கீழ் பல பரிமாண வெளிப்பாடு அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு செல்வார்கள், அப்போது அவர்கள் தாங்கள் பார்வையிடும் மாநிலத்தின் பல்வேறு அம்சங்களை பற்றிய ஆழ்ந்த அனுபவத்தை பெறுவார்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் தொடர்பு கிடைக்கும்.
ஆர்வமுள்ள 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், முக்கியமாக மாணவர்கள், NSS மற்றும் NYKS தன்னார்வத் தொண்டர்கள், வேலை செய்வோர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வரவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க யுவ சங்கம் போர்ட்டல் மூலம் பதிவு செய்யலாம்.