சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழக அரசவைக் கவிஞராகவும், பத்மபூஷன் விருதும் பெற்று தேசிய அளவிலும் புகழ்பெற்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்ட வீரரும், மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்டவரும், தேசியக் கவிஞர் என்று புகழ்பெற்றவருமான நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களது பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்டவரும், தேசியக் கவிஞர் என்று புகழ்பெற்றவருமான நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களது பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடியவர்களை உற்சாகமூட்டிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது”… pic.twitter.com/ynN4xAOxu5
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023
சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடியவர்களை உற்சாகமூட்டிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடல், கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இயற்றியது.
சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழக அரசவைக் கவிஞராகவும், பத்மபூஷன் விருதும் பெற்று தேசிய அளவிலும் புகழ்பெற்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரவித்துள்ளார்.