திமுக ஒரு சிலரின் நலனுக்காக பாடுபடுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
14 ஏப்ரல் 2023 அன்று, திமுக தலைவர்கள் 1,34,317 கோடிக்கு சொத்து குவித்துள்ள விவரங்கள் அடங்கிய #DMKFiles பகுதி 1-ஐ வெளியிட்டோம்.
#DMKFiles இல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு ₹50,208 கோடி மற்றும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டோம்.
On 14th April 2023, we released part 1 of #DMKFiles, detailing the wealth amassed by DMK leaders for a quantum of 1,34,317 Crores.
In #DMKFiles, we released the wealth of DMK MP Thiru Jagath Rakshakan for a value of ₹50,208 Crores and the list of companies owned by him & his… pic.twitter.com/RyC4ntw4Wu
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023
ஜெகத்ரட்சகன் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, வருமான வரித்துறையினர் அவரது முறைகேடுகளின் பட்டியலை செய்திக்குறிப்பாக வெளியிட்டது. இது எங்களின் குற்றச்சாட்டை நியாயப்படுகிறது.
1. ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ₹400 கோடிக்கு மேல் கணக்கில் வராத கட்டண ரசீதுகள்.
2. அவரது அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகைக்கான கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை ₹25 கோடி.
3. மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
4. கணக்கில் வராத முதலீடுகளைச் செய்ததற்காக, பணமாக திரும்பப் பெறப்பட்ட, இல்லாத நிறுவனங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
5. கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைக வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ₹1200 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளது.
திமுக ஒரு சிலரின் நலனுக்காக பாடுபடுகிறது என்பதும், இந்த ஊழல் திமுக அரசின் கையில் இருப்பது, நமது மாநில மக்களின் அவலநிலை என தெரிகிறது என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.