அமைதி புகழுக்கான பாதை - குடியரசுத் தலைவர்!
Jul 26, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி புகழுக்கான பாதை – குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், மகாத்மா காந்தியால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் சத்தியாகிரகத்தின் நினைவாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நீங்கள் என்று கூறினார். இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால், உலகம் முழுவதும் மதிக்கப்படும் விலைமதிப்பற்ற பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளவும், உள்வாங்கவும் எளிமை மற்றும் உண்மையின் நல்ல விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எளிமை மற்றும் உண்மையின் பாதை, உண்மையான மகிழ்ச்சி, அமைதி மற்றும் புகழுக்கான பாதை என்று குறிப்பிட்டார். அவருடைய போதனைகளின்படி மனம், பேச்சு மற்றும் செயல்களால் எப்போதும் சத்தியத்தின் பாதையைப் பின்பற்ற மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அஹிம்சை, இரக்கம், ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய கொள்கைகளின் மீது காந்தியடிகள் மக்களின் நம்பிக்கையை அதிகரித்தார் என்று கூறினார்.

நமது சமூகம், அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றை இந்தியத்தன்மையுடன் மிக ஆழமாக இணைத்தவர்  அவர் என்று தெரிவித்தார். உலக சமூகத்தில் பலர் காந்தியை இந்தியாவின் உருவமாக காண்பதாக கூறினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பாரன் சத்தியாகிரகம் சமூகத்தின் கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். அந்த இயக்கத்தின் போது, சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் இணைந்து சமைத்து உண்டதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 106 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது உத்தரவின் பேரில், சம்பாரன் மக்கள் சமூக, சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் பாதையைத் தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஆட்சியைப் பணியவைத்தார் என்று கூறினார்.

இன்றும், சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் அதே பாதை நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் பாதையில் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.

Tags: President Droupadi MurmuGandhi Central University
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

ஊழல் திமுகவை உறுதி செய்த வருமான வரித்துறை! – அண்ணாமலை.

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies