பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (19-ந்தேதி), நாளை (20-ந்தேதி) மற்றும் 25-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரையிலும் இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் 19-ந்தேதி (இன்று), 20-ந்தேதி மற்றும் 25-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அதே தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வரும் 29-ந்தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.