தமிழகத்தில் 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திலிருந்து விடுவிப்பு! -நிலக்கரி அமைச்சகம்.
Sep 10, 2025, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திலிருந்து விடுவிப்பு! -நிலக்கரி அமைச்சகம்.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் போது நிலக்கரி அமைச்சகம் அதிகபட்ச சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Web Desk by Web Desk
Oct 19, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதும், நாட்டின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதும் நிலக்கரி அமைச்சகத்தின் குறிக்கோள் ஆகும்.

அமைச்சகத்தின் முயற்சிகளின் பயனாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த நிலக்கரி நுகர்வில் இறக்குமதியின் பங்கு 26 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், இந்தியா ஆண்டுதோறும் 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதிக்காக, இந்தியா ரூ.3.85 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.

நிலக்கரி இருப்புகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனவே, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும்.

நாட்டின் நிலக்கரி வளம் மிக்க பகுதிகள், காடுகள் நிறைந்த புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன.  காடுகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

இருப்பினும், பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டு, மென்மேலும் நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரத்தில், நிலக்கரி அமைச்சகம் காடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புடன் உள்ளது, எனவே, தேவைப்படும் குறைந்தபட்ச வனப் பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் இழந்த வனப்பரப்புக்கு இருமடங்கு ஈடுசெய்யப்படுகிறது.

எந்தவொரு நிலக்கரிச் சுரங்கத்தையும் இயக்குவதற்குத், தேவையான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவது கட்டாயமாகும்.

நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு பகுதி வன நிலத்தை உள்ளடக்கியதாக இருந்தால், செயல்பாட்டுக்கு முன் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

எந்தவொரு ஒப்புதலும் வழங்கப்படுவதற்கு முன்பு கடுமையான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் உயர் அளவுகோல்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைகளைப் புறக்கணித்து எந்த நிலக்கரிச் சுரங்கமும் ஏலம் விடப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, லெம்ரு யானைகள் வழித்தடத்தின் கீழ் வரும் நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற சத்தீஸ்கர் அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்களும் மேம்படுத்தப்படவில்லை. தனியார் நிலக்கரி சுரங்கங்களும் ஏல வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் அரசின் வேண்டுகோளின் பேரில், லெம்ரு யானை வழிப்பாதைக்கு அப்பால் உள்ள பகுதிகளும் விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரின் சுமார் 10% இருப்பு கொண்ட 40 க்கும் மேற்பட்ட புதிய நிலக்கரிச் சுரங்கங்களை விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.

வனப் பகுதிகளை ஏலத்தில் விட வேண்டும் என்று தொழில்துறை கோரிக்கைகள் இருந்தபோதிலும் அவற்றைப் பாதுகாப்பதற்காக நிலக்கரி அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ministry of coal
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய பிராண்ட் அடையாளம் அறிமுகம்!

Next Post

காஸா மருத்துவமனை தாக்குதலில் யாரும் இறக்கவில்லை: ஆதாரங்களுடன் இஸ்ரேல் உறுதி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies