தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 24 மூலம் மத்திய புலனாய்வு பணியகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு-II தேர்வு எழுதிய ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு-II தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும், தேர்வில் முறைகேடு நடந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியானதாக தெரிவித்துள்ளார்.
எனவே விடை தாள் நகல் கோரி (OMR) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐபி தரப்பில் மேல்முறையீட்டாளர் கோரும் தகவல் பிரிவு 24, RTI சட்டத்தின் கீழ் தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்டிஐ சட்டத்தின் சில பிரிவுகளில் இருந்து ஐபிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.