அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.2-ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் கடல் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பொதுவாக நிகழும் மிதமான நிலநடுக்கம் ஆகும். இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.