எங்கும் ஊழல் எதிலும் ஊழல் திமுக! - அண்ணாமலை!
Sep 10, 2025, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் திமுக! – அண்ணாமலை!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சாரக் கட்டணத்தை 15% முதல் 50% வரை உயர்த்தி, சூலூர் மக்களின் முக்கிய வாழ்வாதாரமான விசைத்தறிகளை முடக்கியிருக்கிறது திமுக என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சூலூரில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

9 ஆம் நூற்றாண்டில், கரிகாற்சோழன் காலத்தில் சுயம்பு மூர்த்தியாக உருவாகிய வைத்தியலிங்கமுடையார் அருள்பாலிக்கும் சூலூரில், வெகு சிறப்பாக நடந்தேறியது. இங்கு கிடைத்த 2300 ஆம் ஆண்டு பழமையான நாணயங்கள் சூலூர் பகுதியின் வரலாறை காட்டுகிறது. வறட்சி காலத்தில் உருவான சூலூர் குளம் பாதுகாப்பு அமைப்பு, இன்று வரை சூலூர் குளத்தை வற்றாமல் பாதுகாத்து, 400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற வழிவகுத்திருப்பது பெருமை.

திமுகவின் சாதனைகள், 52,000 கோடி டாஸ்மாக் வருமானம், கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியானது, மாநிலத்தின் கடன்சுமையை 7,20,000 கோடியாக அதிகரித்தது, மணல் கொள்ளையால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாக்கி இருப்பது, கோவில் உண்டியலை கொள்ளை அடிப்பது, மகளிர்…

— K.Annamalai (@annamalai_k) October 20, 2023

ஆங்கிலேயரை வெளியேற்ற 1942 ஆகஸ்டு 26-ல் சூலூர் ராணுவ விமான நிலையத்துக்கு போராளிகளால் தீ வைக்கப்பட்டது. தியாகிகள் என்.ஜி.ராமசாமி, கே.பி.திருவேங்கடம், கே.வி.ராமசாமி, ப.சு.சின்னதுரை உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தினர்.

அவர்களை காட்டிக்கொடுக்காத சூலூர் மக்களை ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்தினர். எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் காட்டி கொடுக்காததால் ‘திமிர் வரி’ என்ற வரியை அமல்படுத்தினர். நீ திமிர் வரி விதித்தாலும் விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று தீர்க்கமாக இருந்தவர்கள் சூலூர் மக்கள்.

சூலூர் தொகுதியில் மட்டும் 1லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களுக்கு திமுக கொடுத்து நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளான, வாக்குறுதி எண் 138 – நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி, வாக்குறுதி எண் 139 – விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசு பள்ளி சீருடை கொள்முதல், வாக்குறுதி எண் 140 – அரசு நூல் கொள்முதல் நிலையம் என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணத்தை 15% முதல் 50% வரை உயர்த்தி, இந்தப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான விசைத்தறிகளை முடக்கியிருக்கிறது திமுக.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தீயணைப்பு நிலையம், அரசுக் கலைக்கல்லூரி, சூலூரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல், சூலூரை மையப்படுத்தி தொழிற்பேட்டை, வேலை வாய்ப்பை அதிகப்படுத்திடும் வகையில் சோமனூரில் ஜவுளிச் சந்தை, ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன. ஆனால் திமுக அரசு இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறது.

 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோவை மாவட்டத்தில் மட்டும், 53,688 பேருக்கு பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ், 3,30,588 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,14,763 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 43,451 பேருக்கு 300 ரூபாய் மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,19,709 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ். 62,893 விவசாயிகள், வருடம் 6000 ரூபாய், முத்ரா கடனுதவி 9602 கோடி ரூபாய் ஆகிய நலத் திட்டங்கள் வழங்கியுள்ளது. பாஜக இந்த சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்போம்.

திமுகவின் சாதனைகள், 52,000 கோடி டாஸ்மாக் வருமானம், கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியானது, மாநிலத்தின் கடன்சுமையை 7,20,000 கோடியாக அதிகரித்தது, மணல் கொள்ளையால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாக்கி இருப்பது, கோவில் உண்டியலை கொள்ளை அடிப்பது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், யாருக்குக் கொடுத்தார்கள் என்பதே தெரியாமல் தேடும் திட்டத்தை நிறைவேற்றியது, திரைப்படங்களை முடக்குவது, அரசு மருத்துவமனைகளை அபாய மருத்துவமனைகளாக மாற்றி வைத்தது, போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரும் ஆசிரியர்கள், செவிலியர்கள் அனைவரையும் கைது செய்வது, முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தது. ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் அமைச்சர்களைக் காப்பாற்றுவது, சட்டமன்றத்தில் உதயநிதி புகழ் பாடுவது, 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களைச் சரி செய்யாதது. இவைதான் திமுகவின் சாதனைகள்.

ஓசூரில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வைத்த பள்ளிக்கூட மேற்கூரை சிறிய மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் அங்கு இல்லை.

திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டிடத்தின் நிலை இது தான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல். வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

முதலிடம் யாருக்கு ?

Next Post

பங்காரு அடிகளார் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இரங்கல்.

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies