காரிமங்கலம் ஜமாத்தார் முஸ்லீம் மக்களுக்குக் கொடுத்த அறிவிப்பு போல, இந்து சமய குருமார்கள், கோவில் நிர்வாகம், கிராம பஞ்சாயத்தார் அறிவித்தால், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில், இந்துத் தமிழர் சமூக சம்பிரதாயங்களைப் பின்பற்றாதவர்களை இப்படி புறக்கணிப்பதாக இந்து சமய குருமார்கள்,கோயில் நிர்வாகம்,கிராம பஞ்சாயத்தார் அறிவித்தால் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துத் தமிழர் சமூக சம்பிரதாயங்களை பின்பற்றாதவர்களை
இப்படி புறக்கணிப்பதாக
இந்து சமய குருமார்கள்,கோயில் நிர்வாகம்,கிராம பஞ்சாயத்தார் அறிவித்தால் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? pic.twitter.com/tJS91pQaJw— Arjun Sampath (@imkarjunsampath) October 19, 2023
மேலும், அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், காரிமங்கலம் நகர் வாழ் நம் சமுதாய முஸ்லீம் பெண்கள் புர்க்கா அணியாமல் நகரில் நடமாடினாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அவர்களின் வீட்டில் நடைபெறும் நல்ல, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்படிக்கு, முத்துவல்லி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஜாமியா மஜீத், காரிமங்கலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.