2010 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 41 வது அமர்வில் அக்டோபர் 20 ஆம் தேதியை உலக புள்ளியியல் தினமாக அறிவித்துள்ளது.
இந்த தினத்தின் நோக்கம், புள்ளிவிவரங்களின் வெற்றி மற்றும் சேவையை கொண்டாடுவதே ஆகும். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டப் பணிகளை செயலாக்குவதில், புள்ளி விவரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
தினசரி வாழ்வில் புள்ளியியலைப் பயன்படுத்துவதைப் பற்றி பிரபலப்படுத்தும் வகையிலும், புள்ளியியல் எவ்வாறு அரசியலை வடிவமைத்து வகுப்பதில் உதவுகிறது என்பதைக் காட்டும் வகையிலும் புள்ளியியல் தினம் கொண்டாடி வருகிறோம்.
மேலும், ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளிவிவரம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.
ஒவ்வொரு புள்ளியியல் தினத்திற்கு ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுப்போல இந்த புள்ளியியல் தினத்திற்கான கருப்பொருள், ” நாம் நம்பக்கூடிய தகவல்களை கொண்டு உலகை இணைப்போம் ” என்பதாகும்.
இந்த கருப்பொருள் அதிகாரபூர்வமான தகவல்கள், நம்பிக்கை மற்றும் பொது நலன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
இத்தோடு, இப்புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கு இத்தினத்தில் பாராட்டுக்களை தெரிவிப்போம்.