தனக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை ஜடேஜாவிற்கு விட்டுக்கொடுத்த கே.எல்.ராகுல்.
கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முக்கிய பங்குவகிப்பதில் பீல்டர்களும் உள்ளனர்.
பேட்டிங் செய்யும் அணியை அதிக ரன்கள் எடுக்கவிடாமல் தடுப்பது பீல்டர்ஸ் என்றே சொல்லலாம். இப்படி சரியாக பில்டிங் செய்யும் வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைப்பதில் வேற எந்த ஒரு அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு தொடரின் முடிவில் அங்கீகாரம் கிடைத்தாலும், ஒவ்வொரு போட்டிக்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த கவலையை போக்கும் விதமாக பிசிசிஐ சிறந்த பீல்டருக்கு தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரு உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டியில் இந்திய வீரர்களில் யார் சிறப்பாக பில்டிங் செய்தார்களோ அவர்களுக்கு சிறந்த பில்டர் விருதுக்கான தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டியில் சிறந்த பில்டருக்கான விருது என்றும் சிறந்த பில்டராக திகழும் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. கே.எல். ராகுல் அவர்கள் தங்கப்பதக்கத்தை ஜடேஜாவிற்கு வழங்கினார்.
மேலும் அவர் பீல்டிங் செய்த வீடியோவை மைதானத்தில் உள்ள திரையில் பிசிசிஐ ஒளிபரப்பியது, இந்த காணொலியை இந்திய வீரர்கள், இரசிகர்களை போலவே கத்தி கூச்சலிட்டு கொண்டாடினர்.
மேலும் இந்தப் போட்டியிலும் தங்கப்பதக்கம் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படுவதாக இருந்தது, ஆனால் கே.எல்.ராகுல் பிசிசிஐ- யின் நிர்வாகிகளிடம் கலந்துரையாடி ” இந்த விருது எனக்கு வேண்டாம் வேறு யாருக்காவது கொடுங்கள், என்னை கேட்டால் சிறப்பாக கேட்ச் பிடித்த ஜடேஜாவிற்கு வழங்கவேண்டும் என்று சொல்லுவேன் ” என்று பெருந்தன்மையாக தனக்கு கிடைத்த பதக்கத்தை ஜடேஜாவிற்கு விட்டுக்கொடுத்தார்.