ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
இந்தப் போட்டி பெங்களூர் எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஸ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (தலைவர்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் :
அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (தலைவர்), முகமது ரிஸ்வான் , சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.