சத்தீஸ்கர் காங்கிரஸின் ஏடிஎம் ஆக மாறுவதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் 20 இடங்களுக்கு நவம்பர் 7ஆம் தேதியும், மீதமுள்ள 70 இடங்களுக்கு நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தின் வளங்களை காங்கிரஸ் சூறையாடி, மாநிலத்தை பின்னுக்குத் தள்ளுவதாகவும், காங்கிரசின் ஏடிஎம் ஆக மாறுவதை பொதுமக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
“சத்தீங்ஸகர் மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாகவும், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான அலை வீசுவதாகவும், காங்கிரஸ் தோற்கடிக்கப்படும் என்றும் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.