ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகிறது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி லக்னோ மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.
இந்தத் தொடரில் நெதர்லாந்து விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், இலங்கை மட்டும் இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்துடன் நெதர்லாந்து இன்றையப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உண்டாகும். ஆனால், இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், அதிகபட்சமாக 443 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ மைதானத்தில் இந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா 311 ரன்கள் குவித்தது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறையும், 2ஆவது பேட்டிங் செய்த ஒரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் நெதர்லாந்து அணி 22% வெற்றி பெரும் என்றும் இலங்கை அணி 78% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.