மனித விண்வெளி பயணமான ககன்யான் முதலாவது மாதிரி சோதனை பயணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பாரத விஞ்ஞானிகளுக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில், மனித விண்வெளி பயணமான #ககன்யான் -ன் முதலாவது மாதிரி சோதனை பயணத்தை வெற்றிகரமாகச் செலுத்தி, விண்வெளியில் #சுயசார்புபாரதத்தை உருவாக்க அயராத முயற்சிகளையும் ஈடுபாட்டையும் காட்டி வரும் #இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். – ஆளுநர் ரவி எனத் தெரிவித்துள்ளார்.