ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளின் இரண்டாம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகிறது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டி லக்னோவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாம் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடமும் தோற்றது. ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என்று அந்த அணி நம்புகிறது.
மறுபுறம், நெதர்லாந்திற்கு எதிரான தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி தோல்விகளில் இருந்து மீண்டு வர ஆர்வமாக உள்ளது.
அந்த அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையை அபாரமாகத் தொடங்கிய அந்த அணி, உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இலங்கையை வீழ்த்தியது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 44% வெற்றி பெரும் என்றும் இங்கிலாந்து அணி 56% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.