காவலர் வீர வணக்க தினமான இன்று, காவலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
“காவலர் வீர வணக்க தினத்தில், நமது காவல்துறையினரின் அயராத அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறோம். அவர்கள், பெரும் ஆதரவின் தூண்களாக, சவால்களைக் கடந்து, குடிமக்களை வழிநடத்துவதுடன், பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள்.
சேவையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உண்மையான வீர உணர்வை பிரதிபலிக்கிறது. உயரிய தியாகம் செய்த அனைத்து காவலர்களுக்கும் மனமார்ந்த அஞ்சலி” எனத் தெரவித்துள்ளார்.