வரும் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெறும் விஜயதசமி விழாவில் தமிழகத்தை சேர்ந்த பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். துவங்கிய 1925-ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் விஜயசதமி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழக்கம்.
இந்த வருடமும், விஜயதசமி விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்காக, வரும் 24-ம் தேதி நாக்பூரில் பிரமாண்ட வகையில் விஜயதசமி விழா நடைபெற உள்ளது. இந்த விழா, ராஷ்டிய ஸ்வயம் சேவக் தலைவர் டாக்டர் மோகன் பகவத் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக, தமிழக்தைச் சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-ன் விஜயதசமி விழாவில், சிறப்பு விருந்தினராக சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். இவர், எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்தவர்.
மேலும், கொரோனா பரவல் காலத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயசதமி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு தடையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். ஜெயந்தி விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.