மும்பையில் உள்ள துர்கா கோவிலில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துக்கொண்டார்.
இந்தியா முழுவதும் நவராத்திரி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியாவின் பல கோயில்களில் தசரா பூஜை கோலகலமாக நடைபெறுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பல சிறப்பு பூஜைகளில் பொதுமக்களும், பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை கஜோல், துர்கா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மஞ்சள் நிற சேலை அணிந்து காஜல் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது, இரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கோயில் நிர்வாகத்தினர் இரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் பூஜையை சிறப்பாக முடித்துவிட்ட சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் கோவிலிலிருந்து செல்லும் போது அங்கிருந்த இரசிகர்களுடன் கஜோல் செல்ஃபி எடுத்துவிட்டு கிளம்பினார்.