மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எங்கள் சாணக்கியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்
ஒவ்வொரு நாளும் தனது சிந்தனையாலும் உழைப்பாலும் கட்சியை அடுத்த அடுத்த உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும், நமது பாரதத்தின் உள்துறை அமைச்சர் எங்கள் அரசியல் சாணக்கியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்…!
நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் உட்கட்டமைப்பு, காஷ்மீர் எல்லை பிரச்சினை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அகண்ட பாரதத்தை தன்னுடைய சாணக்கியத்தனத்துடன் நாள்தோறும் எங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கும், மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு. அமித் ஷா ஜி அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக எனது அன்பார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.