பாரதப் பிரதமர் மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 59-வது பிறந்த நாள் இன்று. இந்த நன்நாளில் அவர் கடந்து வந்த பாதையைக் காணலாம்.
1964 -ம் ஆண்டு அக்டோபர் 22 -ம் தேதி மும்பையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் அமித் ஷா. அரசியலில் அவரது ஆரம்பப் பயணம் என்பது RSS உடன் தொடங்கியது. கல்லூரி நாட்களில் RSS -ன் மாணவர் பிரிவான ஏபிவிபி -ல் தீவிர உறுப்பினராக ஆனார். கடும் உழைப்பால் தவிர்க்க முடியாத தலைவராக மாறினார்.
2002 -ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது, குஜராத் கலவரத்தைக் கையாள்வதில் மிகுந்த பாராட்டுக்கள் கிடைத்தது. இதன் மூலமே பாஜகவில் சிறந்த தலைவராக உருவெடுத்தார்.
2014 -ம் ஆண்டு பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட அமித் ஷாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என்னெவன்றால், பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார்.
2014 -ல் பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 545 மக்களவைத் தொகுதிகளில் 282 இடங்களை வென்று பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். இந்த அமோக வெற்றி மோடியைப் பிரதமர் பதவிக்கு உயர்த்தியது.
அது மட்டுமல்ல, 2019 -ல் மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா. ஜம்மு – காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றியது ஆகியவற்றால் அமித் ஷாவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்து வருகிறது.
இன்று பாரத நாட்டின் செல்லப்பிள்ளை அமித் ஷா என தேசப்பற்றாளர்களும், பொது மக்களும், பாஜகவினரும் தலையில் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாடத்திற்கு முழுமையாக தகுதி வாய்ந்தவர் அமித் ஷா மட்டுமே நிஜத்திலும் நிஜம்.