ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றிப் பெற்று வருகிறது. இந்நிலையில் எந்த அணி வெற்றியை தக்கவைத்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே நடப்பு உலகக் கோப்பையில், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிக்க, நட்சத்திர பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை குவிப்பதன் மூலம் இவர்களின் வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது.
இதனால், நடப்பு உலகக் கோப்பையில் தங்களில் யார் சிறந்த அணி என்பதை நிரூபிக்கவே, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதேநேரம், உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலமாக கருதப்பட்டாலும், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயமடைந்து இருப்பது சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 116 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 58 முறையும், நியூசிலாந்து 50 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிய, ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதோடு, அண்மைக் காலமாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்தியா 63% வெற்றி பெரும் என்றும் நியூசிலாந்து 32% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.