மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 59-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலில் பிறந்த நாள் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார் பிரதமர் மோடி. பாரதத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அளப்பரிய பணிகளை, அர்ப்பணிப்புடன் செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனப் வாழ்த்தும், புகழாரமும் சூட்டியுள்ளார்.
தேசத்திற்கான அதீத அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நிர்வாகத் திறன் ஆகியவை பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வாழ்த்தியுள்ளார்.
தலைமைப் பண்பு, பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு பாஜகவின் ஒவ்வொரு காரிய கர்த்தாவிற்கும் ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது, அமித் ஷா நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக உள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்.
பாஜக மகளிர் தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாதுகாப்பான பாரதத்தைக் கட்டமைத்து வரும், அரசியல் சாணக்கியர் அமித்ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாஜக தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் என நாடு முழுவதும் பல திசைகளிலிருந்தும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.