சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 38 வயதான ஐ.டி. ஊழியர் ஜானகிராமன். இவர், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போலவே, பேடிஎம் போஸ்ட் பேட் என்ற செயலியை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி இவரின் தொலைப்பேசிக்கு செயலியின் பெயரில் ஐ.வி.ஆர்., எனும் தானியங்கி அழைப்பு வந்துள்ளது.
அதில், அவரின் பேடிஎம் கணக்கிலிருந்து, 5000 ரூபாய் சந்தேக பரிவர்த்தனை நடந்ததாக கணினி குரலில் கூறியுள்ளது. மேலும் இந்த பணபரிவர்த்தனையை தடுக்க ஒன்றை அழுத்தவும் என்று கூறியதை நம்பி ஜானகிராமன்னும் எழுதியுள்ளார்.
பிறகு உங்கள் தொலைபேசிக்கு ஒரு ஓ.டி.பி எண் வரும் அதையும் பதிவிடுங்கள் என்ற கூறியதை ஓ.டி.பி. என்னையும் பதிவிட்டுள்ளார். அப்போது அவரது கணக்கில் இருந்து 4940 ரூபாய் பணம் செலவிடப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட ஜானகிராமன் அந்த அழைப்பை துண்டித்துள்ளார்.
பிறகு அதுத்த அரைமணி நேரத்திற்கு இவரின் தொலைபேசிக்கு 600 க்கும் மேற்பட்ட ஓ.டி. பி எண்கள் வந்துள்ளது. இதுத் தொடர்பாக பேடிஎம் போஸ்ட் பேட் நிறுவனத்திடம் இணையம் வாயிலாக புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதனால் நேற்று வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பொதுமக்கள் இதுபோன்ற ‘ஆன்லைன்’ மோசடியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக, ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஒரு மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், உடனடியாக குற்றத்தை தடுத்து, நடவடிக்கை மேற்கொள்ள முடியும்’ என்றனர்.