மைசூர் தசராக் கொண்டாட்டம் 14 -வது நூற்றாண்டில், விஜயநகர சாம்ராஜ்யத்தின்போது தொடங்கியது.
தசரா திருவிழா தற்போது கர்நாடக மாநில அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறுகிறது.
தங்க மண்டபத்தில் மைசூர் அரச பரம்பரையின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி சிலை ஊர்வலமாக யானையின் மீது கொண்டு செல்லப்படுகிறது.
நடனக் குழுக்கள், வாத்தியக் குழுக்கள், வண்ண அலங்காரங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் அடங்கிய ஊர்வலம் மைசூர் அரண்மனையில் தொடங்கி, பன்னிமண்டபம் எனப்படும் வன்னிமர மைதானத்தில் முடிவடைகிறது.
தசரா விழாவின் போது, மைசூர் அரண்மனை லட்சம் விளக்குகளால் ஜொலிக்கும்.
இதனிடையே, மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காகப் பீரங்கி பயிற்சி நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீர் விபத்து ஏற்பட்டது.
இதில், பீரங்கி பயிற்சியின் போது, பீரங்கிக் குண்டு வெடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பீரங்கிக் குண்டு வெடித்துச் சிதறும் பரபரப்பு விடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது