மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்காக தனது இறுதி ஆட்டத்தில் விளையாடிய மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறிய நிலையில் தற்போது சச்சினின் உருவ சிலை வடிவமைக்கப்பட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சிலையை அகமது நகரை சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே வடிவமைத்து வருகிறார். இந்த சிலை சச்சின் டெண்டுல்கர் பேட்டை பிடித்து அடிப்பதுப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சச்சின் டெண்டுல்கரின் உருவச்சிலை நவம்பர் 1 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.