ஜாதித் தலைவர்களாக தியாகிகளை அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக் கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சித் தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா?. சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது. காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் ஜாதி சங்கத்தலைவர்களாக மாற்றியிருப்பர்.
தியாகிகளை ஜாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். தமிழகம் புண்ணிய பூமி. இங்கு ஆரியம்- திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவித்தார்.